இராஜகேசரி

இராஜகேசரி

لا توجد تقييمات بعد
2008 · التاميلية · غلاف ورقي
أضف إلى الرف

قيم هذا الكتاب


تصدير مجلة الكتاب

الوصف

விறுவிறுப்பும் சரித்திரச் செய்திகளும் பின்னிப் பின்னி இழையோடும் இந்த வரலாற்றுப் புதினம் நிகழும் காலம் ஏறக்குறைய கி.பி. 1003.

முதலாம் ராஜராஜ சோழரின் பிறந்த நாளான ஐப்பசி மாத சதய நட்சத்திர நாளன்று விமரிசையான கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது சோழர் தலைநகரம். விழாவில் கலந்து கொள்ள, நாட்டின் பிறபகுதிகளிலிருந்து மக்கள் தலைநகரை நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர். ஓராண்டுக்கு முன் இராஜராஜரால் திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்ட இராஜராஜேஸ்வரம் (தஞ்சை பிருகதீசுவரர் கோயில்) வெகு வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. சிற்பிகள், சித்திரக்காரர்கள், தொழில் வல்லுநர்கள், சமயக் குரவர்கள் என பலதுறை வல்லுநர்களால் நிறைந்திருக்கிறது அந்த வளாகம். கடவுளுக்குப் பணிசெய்ய தேவரடியார் எனப்படும் 400 நடன மங்கையர் நாட்டின் பல பாகங்களிலிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்.பிறந்த நாள் விழாவில் இராஜராஜ சோழரின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்ட “ராஜராஜ விஜயம்” என்ற நாட்டிய நாடகத்தை அரங்கேற்ற விஜயராஜ ஆச்சாரியரின் தலைமையில் முனைப்பாக ஒத்திகைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சோழநாட்டின் தலைநகரம் இவ்வாறு பிறந்த நாள் விழாக் கொண்டாட்ட ஏற்பாடுகளில் மகிழ்ச்சியோடு மூழ்கியிருக்க, தஞ்சைக்குச் சில காதங்கள் தள்ளி அமைந்திருக்கும் துழாய்க்குடியில் காட்டுப் பகுதியில் ஒரு வயதான முன்னாள் சோழப்படை வீரர் அம்பலவாணரின் கண்முன் ஒரு வீரன் படுகொலை செய்யப்படுகிறான். இறக்குமுன் அந்த வீரன் இராஜராஜரைக் கொல்வதற்காக செய்யப்பட்டுள்ள சதி பற்றிய சில தகவல்களைக் கூறிவிட்டு இறக்கிறான். தவித்துப் போகும் அம்பலவாணர் அந்தத தகவல்களைத் தஞ்சைக்கு எடுத்துச் செல்ல.. அங்கே சோழ சேனாதிபதி பரமன் மழபாடியார் அவருடன் இணைந்து கொள்கிறார். பேரரசருக்கு எதிராகத் தீட்டப்பட்டிருக்கும் சதி வெற்றி பெறுமா? அந்த த் தாக்குதல் எவ்வாறு நடைபெறும்? அத்தனை பாதுகாவலையும் மீறி இத்தனை துணிவுடன் அரசரின் உயிரைப் பறிக்க முனைவது யார்? எதற்காக?

பக்கத்திற்குப் பக்கம் விறுவிறுப்பு குறையாமல் வளரும் இந்தப் புதினம் தமிழில் நல்ல படைப்புக்களை எதிர்நோக்கும் வாசகர்கள் தவறவிட்டுவிட முடியாத தரமான படைப்பு.

تفاصيل الكتاب

تنسيق غلاف ورقي
صفحات 359 صفحات
لغة التاميلية
منشور Jan 1, 2008
الناشر பழனியப்பா பிரதர்ஸ்
رقم ISBN-13 9788183795050
أضف إلى الرف

قيم هذا الكتاب


تصدير مجلة الكتاب