الوصف
தனக்குப் பின்னால் நின்ற யாரோ ஒரு புருஷன் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி சொன்னதும் பெரும் திகிலுக்கு உள்ளான ராஜ்யஸ்ரீ உடனே திரும்பிப் பார்த்தாளில்லை. தானேசுவர அரண்மனைப் பெரிய காவலர் அனுமதியின்றி யாரும் உட்புக முடியாத அந்த நந்தவனத்தில் இவன் எப்படி வந்தான் என்று சிறிது சிந்தித்த பின்னர், திகிலடைந்த தனது மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு மெதுவாக எழுந்து திரும்பிய ராஜ்யஸ்ரீ, தன்னெதிரே திடகாத்திரமும் அழகும் கொண்ட ஒரு வாலிபன் நிற்பதைக் கண்டு, “யார் நீங்கள்? இங்கு எப்படி வந்தீர்கள்?” என்று வினவினாள். தேவகுப்தன் கண்களிலிருந்த குரூரச்சாயை மறைந்து அது இருந்த இடத்தை இன்பச் சாயை ஒன்று ஆட் கொண்டது. அவன் சொற்களும் மிக மிருதுவாக உதிர்ந்தன.
تفاصيل الكتاب
تنسيق
غلاف ورقي
صفحات
316 صفحات
لغة
التاميلية
منشور
Jan 1, 2004
الناشر
Vanathi Pathippakam