Buchdetails
Beschreibung
இந்தியாவை வழிநடத்திச் செல்லும் ஆற்றலும் வலிமையும் மட்டுமல்ல, அதற்கான தெளிவான செயல்திட்டமும் மோடி-யிடம் உள்ளது என்று லட்சக்கணக்கானவர்கள் நம்பு-கிறார்கள். வெறும் நம்பிக்கை மட்டுமல்ல இது. குஜராத்தில் அவர் செயல்படுத்திக் காட்டிய அசாதாரண-மான சாதனைகள்மூலம் உருவான எதிர்பார்ப்பு.
இதுவரை அரசியலில் ஆர்வம் செலுத்தாத பெரும் திரளான இளைஞர்கள் மோடிக்குப் பின்னால் அணி-வகுத்து நிற்கின்றனர். எப்படி நிகழ்ந்தது இந்தப் பெரும் மாற்றம்? எதிர்ப்புகள், சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் அனைத்-தையும்-மீறி மேலும் மேலும் மக்களை மோடி வென்-றெடுப்பது எப்படி?
இந்திய அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தைச் செலுத்தப்-போகும் மோடியின் அரசியல் வாழ்க்கையின் முக்கியப் புள்ளிகளை இந்தப் புத்தகத்தில் தொட்டுப் பேசுகிறார் அரவிந்தன் நீலகண்டன்.