書籍詳情
格式
平裝書
頁數
416
語言
泰米爾語
已出版
Jul 1, 2017
出版商
Kavitha Publication
描述
பொன்னியின் செல்வன் (இரண்டாம் பாகம்): சுழற்காற்று
கதையின் மற்றொரு நாயகனாகிய அருள்மொழிவர்மன் போர்க்களத்தில் ஈழ நாட்டில் அறிமுகமாகிறான். ஒழுக்கம் மிக்கவனாகிய அவன் சோனாட்டை சுற்றி வளைத்த சூழ்ச்சியை வெல்வானா?
'பொன்னியின் புதல்வர்' என்று வரலாற்றாசிரியர் திரு. சுந்தா அவர்களால் வர்ணிக்கப்பட்ட பேராசிரியர் 'கல்கி' அவர்கள் 1950ஆம் ஆண்டில் 'கல்கி' வார இதழில் தொடராக எழுதி வெளிவந்து மாபேரும் வரவேற்பைப் பெற்று, நூலாக வெளிவந்து பல லட்சம் வாசகர்களை கவர்ந்த வரலாற்று நாவல் 'பொன்னியின் செல்வன்' என்பது நாடறிந்த ஒன்று!
'கல்கி' அவர்களின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. கல்கி பத்திரிகையில் ஆசிரியராக இருந்த பல்வேறுபட்ட படைப்பிலக்கியங்களையும், நகைச்சுவைத் ததும்பும் கட்டுரைகளையும், தலையங்கங்களையும் எழுதி மக்களால் 'கல்கி' என்று அழைக்கப்பட்டார். 'கல்கி' அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட 'கல்கி' வாரஇதழ் பொன்விழாவைக் கடந்து இன்றும் மக்களின் பேராதரவோடு வெளிவந்து கொண்டிருப்பது அவரது புகழுக்குக் கிடைத்த சிறப்பாகும்.
இவர் தலைசிறந்த தேசியவாதி; சுதந்திர போராட்டத் தியாகி, நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பலமுறை சிறை சென்றவர்.
இவரது பல படைப்புகள் திரைப்படங்களாக வந்து மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றன. பார்த்திபன் கனவு, தியாக பூமி, கள்வனின் காதலி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
'இசையரசி' M. S. சுப்பு லெட்சுமி அவர்கள் நடித்த 'மீரா' படத்திற்கு வசனமும், பாடல்களும் எழுதி பாடலாசிரியராகவும் விளங்கினார். 'மீரா' திரைப்படத்தில் அவர் எழுதிய, இசையரசி நடித்து பாடிய 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாடல் மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நீங்காத இடம் பெற்ற பாடல் என்பது கல்கியின் பெறுமைக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
'பொன்னியின் செல்வன்' வந்தியத்தேவன், குந்தவை, வானதி, அருள்மொழிவர்மர், பழுவேட்டரையர், நந்தினி ஆகிய கதாபாத்திரங்களை என்றென்றும் நம் மனதில் நீங்காத கதாபாத்திரங்களாக படைத்து இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார் பேராசிரியர் கல்கி என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை!
மக்களின் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்ற,பெற்று வருகிற 'கல்கி' அவர்களின் அமர காவியமான 'பொன்னியின் செல்வன்' புதினத்தை செம்பதிப்பாக வெளியிடுவதில் கவிதா பப்ளிகேஷன் பெருமை கொள்கிறது. வழக்கம் போல வாசகர்கள் இந்நூலுக்கு பெரிதும் வரவேற்பை நல்குவார்கள் என நம்புகிறேன்.

類型
歷史