Description
ஜப்பான் என்றதும் உங்களுக்கு என்னென்னவெல்லாம் நினைவுக்கு வருகிறது?
இரண்டாம் உலக யுத்தம்? அணுகுண்டுத் தாக்குதல்? அதன்பிறகு ஏற்பட்ட அபார வளர்ச்சி? சோனி? மடக்கு விசிறி? அழகுப் பெண்கள்?
எங்காவது ஜப்பானியத் தீவிரவாத இயக்கம் என்று எதையாவது கேள்விப்பட்டதுண்டா? சிலருக்குத் தெரிந்திருக்கும். அதில் பலர் மறந்தும் இருக்கலாம். 1995ம் ஆண்டு ஜப்பானை மட்டுமல்ல; உலகத்தையே அச்சமும் வியப்பும் கலந்து நோக்கவைத்த ஒரு ஜப்பானிய இயக்கத்தை இங்கே அறிமுகம் செய்துகொள்வோம்.
ம்ஹும். அப்படிச் சொல்வது தவறு. ஜப்பானிய - இந்திய கொலாபரேஷனில் பிறந்த ஒரு பக்தி கோட்டட் பஜனை பயங்கரவாத இயக்கம். தலைப்பைப் பாருங்கள். ஓம்! அந்த ஒரு வார்த்தையை வைத்துத்தான் இந்த ஜம்போ இயக்கம் கட்டமைக்கப்பட்டது. முழுப்பெயர் ஓம் ஷின்ரிக்கியோ (Aum Shinrikiyo).
பத்துப் பதினைந்து கொள்கைத் தீவிரர்கள் ஒருங்கிணைந்து ஆரம்பித்த இயக்கம் அல்ல இது. ஒத்தை ஆசாமி. அசப்பில் தாடி வைத்த தக்காளிப்பழம் மாதிரி இருக்கும் இந்த மனிதர் சைக்கோவா, பைத்தியமா, அரை லூசா, முழுத்தீவிரவாதியா என்று அவர் கைதாகிப் பலவருடங்கள் ஆனபின்பும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் எண்பதுகளில் இவரது இயக்கம் புகழின் உச்சத்தில் இருந்தபோது ஜப்பானிலும் ரஷ்யாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இவருக்கு இருந்தார்கள். வழிபடும் தொண்டர்கள். அவர் ஒருவார்த்தை சொன்னால் ஊரையே காலி பண்ணிவிடத் தயாராக இருந்த வெறிபிடித்த பக்தர்கள். ஊரையென்ன, உலகத்தையே. உண்மையில் அதைத்தான் தன் லட்சியமாகவும் அவர் கொண்டிருந்தார்.
உலகம் அழியப்போகிறது. மூன்றாம் உலக யுத்தம் வந்துதான் தீரப்போகிறது. அமெரிக்கா ஒரு மாபெரும் அழிவு சக்தியாக அப்போது மறு அறிமுகப்படுத்தப்படும். ஜப்பான் மீண்டும் சவக்காடாகும். தப்பிக்க நினைத்தால் ஒரே ஒரு வழிதான். வாருங்கள். வந்து ஓம் ஷின்ரிக்கியோவில் இணைந்துகொள்ளுங்கள். பிரளய காலத்துப் பேழை நான். நவீன உலகத்தின் நோவா நான். ஆபத்பாந்தவன். அநாத ரட்சகன். அசுரர்களை அழிக்கப் பிறந்த கலியுகக் கடவுள் பிரதிநிதி. ஓம், ஓம், ஓம்.
உணர்ச்சிப் பெருக்கெடுத்து ஓடும் சொற்பொழிவுகளால் ஊரெல்லாம், உலகெல்லாம் மக்களைத் தன்புறம் சுண்டி இழுத்த அவர் பெயர் ஷோகோ.
ஜப்பானிய ஓம் ஷின்ரிக்கியோ இயக்கத்தைக் குறித்துத் தமிழில் வெளிவந்துள்ள ஒரே நூல் இதுதான்.

Book Details
Format
Paperback
Language
Tamil